வயசானாலும் கும்முனு இருக்க - ஆபாச மெசேஜ் அனுப்பியவரை விளாசிய ஐஸ்வர்யா

Aishwarya Bhaskaran
By Sumathi Apr 18, 2023 02:30 PM GMT
Report

ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபர்களை நடிகை ஐஸ்வர்யா திட்டி தீர்த்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா

மலையாள திரைப்படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா. தமிழில் நியாயங்கள் ஜெயிக்கட்டும்,தையல்காரன்,மரிக்கொழுந்து,மில் தொழிலாளி,நான் புடிச்ச மாப்பிள்ளை, ஊரெல்லாம் உன் பாட்டு, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு, அன்புள்ள தங்கச்சிக்கு,ராசு குட்டி, மீரா, பொறந்தாலும் ஆம்பளையா பொறக்க கூடாது,

வயசானாலும் கும்முனு இருக்க - ஆபாச மெசேஜ் அனுப்பியவரை விளாசிய ஐஸ்வர்யா | Actress Aishwarya Bhaskaran Slams Netizens

தங்க பாப்பா, உள்ளே வெளியே, எஜமான், மக்கள் ஆட்சி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சூர்யா நடிப்பில் வெளியான ஆறு படத்தில் சவுண்ட் சரோஜா என்ற முக்கிய காதப்பாத்திரத்தின் மூலம் பிரபலமானார். தன்வீர் அஹமத் என்பவரை கடந்த 1994 -ம் ஆண்டு திருமணம் செய்து 1 மகள் உள்ள நிலையில், 1996ல் விவகாரத்து பெற்று பிரிந்தார்.

ஆதங்கம்

இந்நிலையில், சோப் ஆர்டர்களை பெறுவதற்காக சோசியல் மீடியாவில் எனது வாட்ஸ் அப் நம்பரை பகிர்ந்திருந்தேன். அதை தவறாக பயன்படுத்தும் சிலர் எனக்கு தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை அனுப்புகிறார்கள். இதைப்பற்றி பேசவேண்டாம் என்று தான் இருந்தேன். ஆனால் என் மகள் தான், நீ கண்டிப்பா இத பத்தி பேசியே ஆகணும்னு சொன்னா.

வயசானாலும் கும்முனு இருக்க - ஆபாச மெசேஜ் அனுப்பியவரை விளாசிய ஐஸ்வர்யா | Actress Aishwarya Bhaskaran Slams Netizens

அதில், நான் உன்ன வாங்கலாம்னு இருக்கேன், வயசானாலும் கும்முனு இருக்கனு ஒருவர் அனுப்பி இருக்கிறார். டேய் பண்ணி, போய் உங்க அம்மாகிட்ட இந்த டயலாக் லாம் சொல்லுடா. அந்தரங்க பாகங்களை போட்டோ எடுத்து அனுப்புகிறார்கள். அதெல்லாம் பார்த்து எனக்கு வாந்தி தான் வந்தது.

இரவு 11 மணிக்கு மேல் மெசேஜ் அனுப்பி பர்சனலா வீட்டுக்கு வந்து சோப்பை பார்க்கனும்னு கேட்கிறான். புருஷன் இல்லாம ஒரு பெண் தனியாக வாழ்ந்தால் இப்படி தான் கேட்பிங்களா, செருப்பு பிஞ்சிரும் என வீடியோ வெளியிட்டு விளாசியுள்ளார்.