ஸ்கூல்ல தான் அது... நானே போய் கேட்டேன்; அப்பறம் அவரு கேட்டாரு - நடிகை அதிதி பாலன் ஓபன் டாக்!
தனது முதல் க்ரஷ் குறித்து நடிகை அதிதி பாலன் பேசியுள்ளார்.
அதிதி பாலன்
அருவி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதிதி பாலன். அந்த படத்தில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருப்பார்.

முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தினார். ஆனால் அதற்கு பின்னர் பெரியளவில் அதிதி பாலனுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின்னர் கருமேகங்கள் கலைகிறது என்ற படத்தில் நடித்திருந்தார்.
முதல் க்ரஷ்
தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தில் அதிதி பாலன் நடித்துள்ளார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவர், தனது முதல் க்ரஷ் எப்போது? என்பது குறித்து பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது "என்னோட முதல் க்ரஷ் ஸ்கூல் டைம்ல. நானே போய் ப்ரொப்போஸ் பண்ணேன். ஆனால் அவரு நோ சொல்லிட்டாரு. நானே போய் கேட்டு நானே பல்ப் வாங்கிட்டேன். அப்பறம் அவரு வந்து கேட்டாரு, ரெண்டு பேரும் டேட் பண்ணோம் " என்று பேசியுள்ளார்.
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil