"அது" கொஞ்சம் ஜாஸ்தி...அதன் படவாய்ப்புகள் வரல!! நடிகை அபிராமி ஓபன் டாக்!!
நடிகை அபிராமி தொடர்ந்து தனக்கு திரையுலகில் அடுத்தடுத்து வாய்ப்புகள் வராமல் போனதற்கான காரணத்தை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நடிகை அபிராமி
தமிழில் அர்ஜுன் நடிப்பில் வெளியான "வானவில்" படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அபிராமி. தொடர்ந்து மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், விருமாண்டி என அடுத்தடுத்து படங்களில் நடித்து முன்னணி நாயகியாக முன்னேறினர்.
தமிழை கடந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு பட மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்த அபிராமி, 2009-ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு திரைஉலகில் இருந்து ஒதுங்கினார். இவர்கள் அண்மையில் கல்கி என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.
அது தான் காரணம்
படங்களில் தனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வராமல் போனதற்கான காரணத்தை அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில், தன்னுடன் நடித்த பலர் தன்னை விட உயரமானவர்கள் என குறிப்பிட்ட அவர், வேறு மொழிக்குப் போனபோது உயரமானவர்களுடனும், உயரம் இல்லாதவர்களுடனும் நடித்ததாக குறிப்பிட்டு, உயரம் தனக்கு அவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்ததில்லை என்றார்.
ஆனால், சிலர் அந்தப் பொண்ணு ரொம்ப உயராமாக இருக்கிறார் என்று தன்னை ஒதுக்கிய சந்தர்ப்பங்கள் ஓரிரு முறை உண்டு என தெரிவித்த அபிராமி, இது பெரிய பிரச்சனையாக தான் நினைக்கவில்லை என்பது தான் உண்மை என்று கூறினார்.