அடையாளம் தெரியாமல் மாறிப்போன கமல் பட நடிகை: யாரென்று தெரிகிறதா?
கமல் மற்றும் அஜித்துடன் நடித்த நடிகை வசுந்தரா தாஸின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்த வசுந்தரா அதிகமாக இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார்.
2000ஆம் ஆண்டு கமலின் "ஹே ராம்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகை வசுந்தரா தாஸ் அறிமுகமானார்.

தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்த இவருக்கு அஜித்துடன் நடித்த "சிட்டிசன்" படம் அவரது முக்கியமான படமாக அமைந்தது.
நடனம் சரியாக வராதபோதும், இவர் சிட்டிசன் படத்திற்காக கடுமையாக பயிற்சி செய்து நடித்தார்.
நடிகை மட்டுமல்லாமல், ஒரு சிறந்த பாடகியான வசுந்தரா முதல்வன் படத்தின் ஷகலகா பேபி, குஷி படத்தின் கட்டிப்புடி, ரிதம் படத்தின் அய்யோ பத்திக்கிச்சு போன்ற பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

2007க்கு பிறகு நடிப்பில் இருந்து விலகிய வசுந்தரா தாஸ், தற்போது டிரம்ஜாம் என்ற மியூசிக் பேண்ட் மூலம் இசைக்கச்சேரிகள் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான அவரது புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.