விஜய் பிறந்த நாள் காமன் டிபி வெளியானது!

Thalapathy Actor Vijay Vijay Birthday
By Thahir Jun 21, 2021 12:04 PM GMT
Report

விஜய் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் விஜயின் காமன் டிபி-யை தங்களது சமூக வலைதள கணக்குகளின் முகப்புப் படமாக வைத்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

விஜய் பிறந்த நாள் காமன் டிபி வெளியானது! | Actorvijay Thalapathy Birthday

நடிகர் விஜய் தனது 47-வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்துப் பார்க்கும், நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் விஜய்.

நடிப்பு, ஸ்டைல், நடனம், ஆக்‌ஷன், பாடல் என அனைத்திலும் தனது திறமையால் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார். அவரது பிறந்தநாளைக் கொண்டாட விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர். நலத்திட்ட உதவி, உணவு, ரத்த தானம் என விஜய் ரசிகர்கள் பொது சேவையில் களம் இறங்குவர். மறுபுறம் இணையத்தில் இருக்கும் விஜய் ரசிகர்கள் அவரது பிறந்தநாள் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடுவார்கள்.

இந்நிலையில் CDP எனப்படும் காமன் டிபி-யை டிசைன் செய்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக இந்த காமன் டிபி-யை தங்களது சமூக வலைதள கணக்குகளின் முகப்புப் படமாக வைத்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் விஜய் பிறந்தநாளில் எந்த மாதிரியான காமன் டிபி வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் இந்த வருட டிபி-யில் ’மெர்சல்’ வெற்றிமாறனும், ‘பிகில்’ ராயப்பனும் கைகளில் தங்கள் பலத்தை நிரூபிக்கும் விதமாக உள்ளது. சின்ன வயது விஜய் முதல் தளபதி 65 பட விஜய் வரை அவரின் முக்கியமான தோற்றங்கள் இடம் பெற்றுள்ளன.

இதனை தற்போது விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.