நடிகர் விஜயின் பிறந்த நாளுக்கு ஒட்டப்பட்ட போஸ்டர் மூலம் நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைத்த விஜய் ரசிகர்கள்
Political
Actor Vijay
Vijay Birthday
By Thahir
தமிழகத்தில் அதிமுக திமுக கட்சியை சேர்ந்த இருபெரும் ஆளுமை மிக்க தலைவர்களாக இருந்து ஜெயலலிதா., மற்றும் கலைஞர் கருணாநிதி மறைந்த நிலையில், நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை விஜய் ரசிகர்கள் சார்பில் அரசியல் வாசகங்கள் இடம்பெற்றுள்ள போஸ்டர் மதுரையில் பல்வேறு பகுதிகளில் ஒட்டபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த போஸ்டரில் நீங்கள் அமர்ந்ததால் நாற்காலியும் தோரணையாக! அமர வேண்டிய நாற்காலியில் அமர்ந்தால் மக்களும் மகிழ்ச்சியாக! என குறிப்பிட்டு 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டுமென வலியுறுத்தி மதுரை விஜய் ரசிகர்கள் அவரை அரசியலுக்கு அழைத்து பிறந்தநாள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
