நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தம்: காரணம் என்ன?

Chennai tamilcinema
By Irumporai Mar 20, 2022 05:31 AM GMT
Report

கடந்த 2015 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.இந்த அணி நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் முடிவடைந்தது. இதனையடுத்து, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி நடந்த நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது.

அதன்படி, தலைவர், இரு துணைத் தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் போட்டியிட்டன. மொத்தம் பதிவான 2500 வாக்குகளில் சுமார் 1150 வாக்குகள் தபால் மூலம் பதிவு செய்யப்பட்டன.

இந்த தேர்தல் செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து நாசர், விஷால் ஆகியோர் மேல்முறையீடு செய்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் செல்லும் என்றும், ஓட்டுகளை எண்ணவும் உத்தரவிட்டது.

வாக்கு எண்ணிக்கை உய்ரநீதிமன்ற உத்தரவுப்படி, நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் அவர்கள் முன்னிலையில், இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

 இந்த நிலையில், ஐசரி கணேஷ் தரப்பு நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை விட ஐந்து வாக்குச்சீட்டுகள் கூடுதலாக உள்ள உள்ளதாக புகார் அளித்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.