காதலித்து திருமணம் செய்து கொண்ட சின்னத்திரை பிரபலங்கள் - குவியும் வாழ்த்து
சின்னத்திரை நடிகர்கள் சித்து சித் மற்றும் ஸ்ரேயாவின் திருமணம் நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2018 முதல் 2020 வரை 500 எபிசோடுகளுக்கும் மேல் வெற்றிகரமாக ஓடிய திருமணம் சீரியலின் ரீல் ஜோடிகளான சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வந்த நிலையில், தற்போது தங்களின் நீண்ட நாள் கனவான திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்துள்ளனர்.
இவர்களின் திருமணத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தினர். இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நட்சத்திர ஜோடியினரை சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்தி வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் சித்து தற்போது நடித்து வருகிறார். அன்புடன் குஷி சீரியலில் ஸ்ரேயா கடைசியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.