காவேரி விவகாரம் தொடர்பாக நடிகர்கள் பேச வேண்டிய அவசியமில்லை - நடிகர் சரத்குமார்
Sarathkumar
By Thahir
காவேரி விவகாரம் தொடர்பாக நடிகர்கள் பேச வேண்டிய அவசியமில்லை என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை
காவேரி விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் காவிரி பிரச்சனையை நடிகர்கள் தீர்த்து வைக்க வேண்டிய தேவை இல்லை என்றும் இது மத்திய அரசு எடுக்க வேண்டிய முடிவு என்றும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் ஒரு நடிகனுக்கு அழுத்தம் தர வேண்டாம் என்றும் அரசு கவனத்தில் கொள்ளாத நிலை ஏற்பட்டு போராட்டம் எழுந்தால் மக்களுக்காக ஒன்று சேர்ந்து நிற்பேன் என்றும் தெரிவித்தார். .