இணையத்தில் வைரலாகும் யோகி பாபு,நடராஜன் சந்திப்பு புகைப்படம்!
நடிகர் யோகி பாபுவும்,இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனும் நேரில் சந்தித்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா நடிகர் யோகி பாபுவும்,இந்திய கிரிக்கெட் வீரர் நேரில் சந்தித்துக்கொண்டுள்ளனர். இருவரும் உணவகம் ஒன்றி சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், யோகி பாபு தீவிர முருகன் பக்தர் என்பதால் முருகன் சிலை ஒன்றையும் அன்பு பரிசாக நடராஜன் கொடுத்துள்ளார்.

நடராஜனின் ட்விட்டர் கேப்ஷனில், "நினைவில் வைத்துக் கொள்ளவேண்டிய முக்கிய நாள் இது. எப்போதும் அன்பாகவும் கலகலப்பாகவும் இருக்கக்கூடியவரான நண்பர், யோகிபாபுவை சந்தித்ததில் மகிழ்ச்சியாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

யோகி பாபுவும் - நடராஜனும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். சமீபத்தில் நடிகர் யோகி பாபுவின் மண்டேலா படத்தை கிரிக்கெட் வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி பாராட்டியிருந்தார்.
அப்போது யோகி பாபு எனது நண்பர்தான் எனக்கூறி ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமியை நடிகர் யோகி பாபுவுடன் வீடியோ காலில் நடராஜன் பேசவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.