நடிகர் விஜய்யை போல தனது ரசிகர்களுக்கு ‘குட்டி ஸ்டோரி’ சொன்ன யாஷ் - வைரலாகும் வீடியோ
நடிகர் விஜய்யை போன்று உலகளவில் தனக்கு பெருகியிருக்கும் ரசிகர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் குட்டி ஸ்டோரி ஒன்றை நடிகர் யாஷ் கூறி நன்றி தெரிவித்துள்ளார்.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி உலகெங்கும் மிகவும் பிரமாண்டமாக திரையிடப்பட்ட படம் கே.ஜி.எஃப் : 2.
ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் முதலாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தயாரிக்கப்பட்ட கே.ஜி.எஃப் : 2 தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்திய படமாக வெளியானது.
இப்படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கே.ஜி.எஃப்: 2 படத்திற்கான டிக்கெட்டுகள் லட்சக்கணக்கில் விற்பனையாகி தொடர்ந்து அனைத்து தியேட்டர்களும் ஹவுஸ் ஃபுல் ஆக வைத்துள்ளது.
பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ள கேஜிஎஃப் 2 திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களிலேயே உலகளவில் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது.
படம் வெளியாகி இதுவரை 600 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படும் நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் யாஷ் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய்யை போன்று உலகளவில் தனக்கு பெருகியிருக்கும் ரசிகர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் குட்டி ஸ்டோரி ஒன்றை கூறியுள்ள யாஷ், ரசிகர்கள் அனைவருக்கும் கே.ஜி.எஃப் படக்குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்வதாக கூறியிருக்கிறார்.
அந்த வீடியோ பதிவில், மிகுந்த வரட்சியால் பாதிக்கப்பட்ட கிராமம் ஒன்று பிரார்த்தனை கூட்டத்தை ஏற்பாடு செய்து ஊர் மக்களை பிரார்த்தனைக்காக ஒன்று திரட்டியது. அப்போது அங்கு வந்த சிறுவன் ஒருவன் கையில் குடையுடன் வந்தான். அவனை கண்ட எல்லாரும் அவன் குடை கொண்டுவந்ததை பார்த்து முட்டாள் தனம் என்று ஏளனமாக பேசினார்கள்.
— Yash (@TheNameIsYash) April 21, 2022
ஆனால் அந்த சிறிய செயலின் மூலம் பிரபஞ்சத்தின் மீது அந்த சிறுவன் கொண்டிருந்த நம்பிக்கையே வெளிப்பட்டது. அது போல தான் நானும். என் வாழ்வில் இப்படி ஒரு நாள் வரும் என நானுன் அந்த சிறுவனை போலா எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.
என் ரசிகர்களாகிய உங்களது அன்புக்கும் ஆதரவுக்கும் என் ஆழ்மனதில் இருந்து மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது படக்குழுவின் சார்பாகவும் நான் இந்த தருணத்தில் நன்றியை தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார்.
அவரின் இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.