நடிகர் யாஷ்-இன் சொத்து மதிப்பு இவ்ளோவா ? - வெளிவந்த தகவல்
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உலகமெங்கும் மிகவும் பிரமாண்டமாக கடந்த ஏப்ரல் 14-ம் தேதி, நடிகர் யாஷின் கே.ஜி.எப் 2 திரைப்படம் வெளியானது.
கேஜிஎஃப் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உருவாக்கப்பட்ட கேஜிஎஃப் 2-ம் பாகம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்திய படமாக வெளியானது.
நடிகர் யாஷ் உடன் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் காட்சிகள், இருக்கையின் நுனியில் அமரச் செய்து ரசிகர்களை ரசிக்க வைக்கும்படி அமைந்துள்ளது.
கேஜிஎஃப் 2 படத்திற்கான டிக்கெட்டுகள் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே 50 கோடிக்கும் மேல் விற்பனையான நிலையில் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய கலெக்ஷனை கேஜிஎஃப் 2 திரைப்படம் நிகழ்த்தி வருகிறது.
100 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் வெளியான இரண்டாம் நாளே உலகம் முழுவதும் 300 கோடி வரை வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது வரை 1000 கோடி வசூல் வேட்டை செய்து மாபெரும் சாதனை செய்திருக்கிறது.
இந்நிலையில் படத்தில் நாயகனாக நடித்த நடிகர் யாஷ்-இன் சொத்து விவரங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
அதன்படி தென்னிந்திய சினிமாவில் மாஸ் நாயகனாக வலம் வரும் யாஷ் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 53 கோடி வரை இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
இவர் வசிக்கும் வீட்டின் மதிப்பு ரூ 6 கோடி என்று சொல்லப்படும் நிலையில், விளம்பர மாடலிங்’களுக்கு ரூ 60 லட்சம் பெறுவதாகவும். கேஜிஎஃப் ரிலீசுக்கு முன்பு சம்பளம் ரூ 4 முதல் 5 கோடி பெற்று வந்ததாகவும் தற்போது, கேஜிஎஃப் 2 படத்திற்காக யாஷ் ரூ. 27 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் இவர் பயன்படுத்தும் கார்களின் மதிப்பு ரூ 3. 5 கோடி என்று தகவல் வெளிவந்துள்ளது.