நடிகை சிம்ரனை உருகி உருகி காதலித்து விட்டு திருமணத்தின் போது கழட்டி விட்ட நடிகர்..!
உருகி உருகி காதலித்து விட்டு திருமணம் வரை சென்ற கழட்டி விட்ட நடிகை சிம்ரன் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் அறிமுகம்
மும்பை மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை சிம்ரன் இவரின் இயற்பெயர் ரிஷிபாமா. இவர் துார்தர்ஷனின் மெட்ரோ சேனலில் முகாபுலா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
இந்த நிகழ்ச்சி சூப்பர் ஹிட்டானதை அடுத்து இந்தி திரையுலகில் நுழைந்தார். பின்னர் தமிழ் சினிமாவில் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித்,சூர்யா, கமல் விஜயகாந்த், பிரசாந்த், சரத்குமார் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார்.
சிம்ரன் நடித்த கோவில்பட்டி வீரலட்சுமி, துள்ளாத மனமும் துள்ளும் பல்வேறு விருதுகளை பெற்று தந்தது. இதையடுத்து அவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் குவிந்தது.
நடிகருடன் காதலா?
2000 ஆம் ஆண்டு 75 லட்சத்திற்கும் அதிகமான சம்பளம் வாங்கிய நடிகையாக வலம் வந்தார். இந்த நிலையில் 1990 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் கனவு கன்னியாக வந்த சிம்ரனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.
நடிகை சிம்ரனும் துணை நடிகருமான ராஜு சுந்தரத்தை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் நெருங்கி பழகுவதை பார்த்து பலரும் பொறாமைப்படும் அளவிற்கு ஜோடி போட்டு வந்தார்கள்.
சிறிது காலத்தில் பல சர்ச்சைகளில் சிம்ரன் சிக்கியதால் இவர்களுடைய காதல் ப்ரேக் அப் ஆனதாக கிசு கிசுக்கப்படுகிறது.