பிரபல காமெடி நடிகர் மரணம் - சோகத்தில் ரசிகர்கள்

passedaway actorkalidass RIPkalidass
By Petchi Avudaiappan Aug 12, 2021 03:12 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

 தமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் இணைந்து பல காமெடி காட்சிகளில் நடித்த நடிகர் காளிதாஸ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

நடிகர் மற்றும் டப்பிங் கலைஞராக வலம் வந்த காளிதாஸ் சின்னத்திரையில் மர்மதேசம் , சூலம் ஆகிய தொடர்கள் மூலம் பிரபலம் ஆனார். வெள்ளித்திரையில் 80களின் பிற்பாதியில் வில்லன்கள் பலருக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.

சுமார் 3000 படங்களுக்கும் மேலாக டப்பிங் பேசிய அவர் கடைசியாக 'கே.ஜி.எஃப் 2' படத்தில் ஒரு கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேசியுள்ளார். குறிப்பாக வடிவேலுடன் அவர் நடித்த காமெடி காட்சிகள் இன்றும் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒன்றாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக காளிதாஸின் ரத்தத்தில் பிரச்சினை இருந்துள்ளது. அதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு மீண்டும் அவருடைய உடல்நிலை மோசமடைய அவரின் ரத்தத்தை மாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதன்படி மாற்றப்பட்டும் சிகிச்சை பலனின்றி காளிதா ஸ் இன்று உயிரிழந்தார். அவருக்கு திரையுலகைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.