முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த நடிகர் விவேக்கின் மனைவி : கணவரின் பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை
சின்னக் கலைவாணர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரின் எதிர்பாராத மறைவு ஒட்டுமொத்த திரைத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பல கோடி ரசிகர்களை தன் நகைச்சுவையால் சிந்திக்க வைத்த கலைஞன் பூவுலகை விட்டு மறைந்து ஒராண்டு நிறவடைந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அவருக்கு முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்நிலையில் மறைந்த நடிகர் விவேக் வாழ்த்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரின் பெயரை சூட்ட வேண்டும் என விவேக்கின் மனைவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.
அவருடன் விவேக்கின் மகள் மற்றும் செல் முருகன் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.