நடிகர் விவேக்கின் கடைசி வீடியோவை பகிர்ந்து நடிகர் சூர்யா உருக்கம்!

released last video actor vivek actor surya
By Anupriyamkumaresan Aug 13, 2021 03:28 PM GMT
Report

தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்த காமெடி நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17-ம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தமிழ் திரையுலகில் சிறந்த காமெடி நடிகர் பட்டத்தை பெற்றுள்ளார் நடிகர் விவேக். விவேக் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், அனைவரது நினைவில் இருந்து இன்னும் மறையவில்லை.

இந்த நிலையில் தற்போது விவேக்கின் கடைசி வீடியோ ஒன்றை வெளியிட்டு நடிகர் சூர்யா உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் நடிகர் விவேக் 'எங்க சிரி பார்ப்போம்' என்று கூறி அனைவரையும் நகைச்சுவைக்குள்ளாக்கியுள்ளார்.

நடிகர் விவேக்கின் கடைசி வீடியோவை பகிர்ந்து நடிகர் சூர்யா உருக்கம்! | Actor Vivek Last Video Released By Actor Surya

இதை வெளியிட்ட நடிகர் சூர்யா, நம் மனதில் எப்போது நடிகர் விவேக் வாழ்வார் என்றும், விவேக் சாரின் இறுதி வீடியோவை பகிர்வதில் பெருமை கொள்கிறேன் என்றும் உருக்கமுடன் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் வீ மிஸ் யூ சார் என்று தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.