நடிகர் விவேக்கிற்கு திடீர் மாரடைப்பு - ஐ.சி.யூவில் அனுமதி

Heart attack Tamil Nadu vivek kollywood
By mohanelango Apr 16, 2021 06:48 AM GMT
Report

நடிகர் விவேக் திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்தவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்கானித்து வருகின்றனர். நேற்று தான் கொரோனாவுக்கான தடுப்பூசி எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேகிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது