நடிகர் விவேக் குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ள கவுதம் மேனன் - ரசிகர்கள் சோகம்

tweet actor vivek director vasudev menon
By Anupriyamkumaresan Sep 06, 2021 08:05 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சினிமா
Report

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் விவேக் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17-ம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

அவரது மறைவு திரையுலகம் மற்றும் தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. காமெடி மூலமும் நல்ல கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் சொன்ன ஒரு நல்ல சிந்தனை கொண்ட கலைஞரின் மறைவு மக்கள் மத்தியில் மீளா துயரத்தை ஏற்படுத்தியது.

நடிகர் விவேக் குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ள கவுதம் மேனன் - ரசிகர்கள் சோகம் | Actor Vivek About Director Vasuthev Menon Tweet

தற்போது இயக்குனர் கவுதம் மேனன் விவேக் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்."நான் ஓடிடி-காக விவேக் உடன் ஒரு புதிய படத்திற்காக திட்டமிட்டிருந்தேன்.

அப்போது அவர் தனது ஓடிடி அறிமுகமான LOL- எங்க சிரி பாப்போம் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறினார். அதுதான் எங்கள் கடைசி உரையாடல். நான் தற்போது அவர்களின் ஓடிடி அறிமுகத்தைப் பார்க்கிறேன்.

மிகவும் நகைச்சுவையாக உள்ளது. சொக்கு ரிவால்வர் ரிச்சர்டுக் காக இதைப் பதிவிடுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.