நடிகர் விவேக் மரணம்: சோகத்தில் திரையுலகம்
மாரடைப்பு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக், சிகிச்சை பலனின்றி இன்று(அதிகாலை 4.35 மணிக்கு காலமானார்.
மாரடைப்பு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு காலமானார்.
நேற்று காலையில் சுய நினைவின்றி மருத்துவமனைக்கு விவேக் கொண்டு செல்லப்பட்டார். விவேக்கிற்கு ரத்த நாளத்தில் பிளாக் இருந்தது. அதை ஆஞ்சியோ செய்து சரி செய்தார்கள்.
அதன்பிறகு தீவிர சிகிச்சை பிரிவில் எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.
24 மணி நேரம் கழித்துதான் அவரது உடல்நிலை குறித்து மற்ற அறிவுப்பு வெளியிட முடியும் என மருத்துவர்கள் கூறியிருந்தனர்..
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை4.35 மணிக்கு விவேக் உயிர் பிரிந்தது.

நடிகர் விவேக்கின் திடீர் மரணம் திரையுலகினரையும் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.