குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட பிரபல நடிகர் விஷ்ணு விஷால்
flim
celebrity
industry
By Jon
குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட நடிகர் விஷ்ணு விஷால் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் சென்னை கோட்டூர் புரத்தில் தான் வாடகைக்கு தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் மதுபோதையில் ரகளை ஈடுபட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விஷ்ணு விஷாலின் வீட்டில் அதிகாலையில் அதிகளவும் சந்தம் வந்ததாகவும், இது குறித்து கேட்டதற்கு அவர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், சம்மந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தின் சார்பில் புகார் காவல்துறை கூடுதல் ஆணையரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் விஷ்ணு விஷால் வீட்டுக்கு அடிக்கடி அடையாளம் தெரியாத நபர்கள் வந்து செல்வதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.