புனித் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் விஷால் - ரசிகர்கள் நெகிழ்ச்சி
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நடிகர் விஷால் ஆறுதல் தெரிவித்துள்ளார். 46 வயதான பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இதனையொட்டி, அவரது உடலுக்கு பொதுமக்களும் திரைத்துறையினரும் காண்டிவரா மைதானத்தில் அஞ்சலி செலுத்தினர். படப்பிடிப்புகளால் பல நடிகர்களால் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை.
நடிகர் சூர்யா, ராம் சரண், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின் புனித் ராஜ்குமார் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்த நிலையில், தற்போது நடிகர் விஷால் புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.
அதோடு, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.