எம்.ஜி.ஆர். படத்தை தன் நெஞ்சில் பச்சை குத்திய நடிகர் விஷால் - வைரலாகும் புகைப்படம்

Vishal Viral Photos
By Nandhini 1 வாரம் முன்

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். படத்தை தன் நெஞ்சில் பச்சைகுத்திய நடிகர் விஷாலின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஷால்

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக நடிகர் விஷால் வலம் வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் ‘செல்லமே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனையடுத்து, சண்டக்கோழி, திமிரு உட்பட பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் பணியாற்றி வருகிறார். தற்போது, புதுமுக இயக்குநர் வினோத்குமார் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்துள்ள ‘லத்தி’ கடந்த 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

actor-vishal-mgr-photo-viral

வைரலாகும் புகைப்படம்

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்தை தன் நெஞ்சில் நடிகர் விஷால் பச்சை குத்தியுள்ளார். இதைப் பார்த்ததும் அவரது ரசிகர்கள், எம்.ஜி.ஆர். மேல் விஷால் வைத்துள்ள அன்பை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.