மோசமான உடல்நிலை.. நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதியா? வெளியாக அதிர்ச்சி தகவல்!
நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஷால்
தெலுங்கு சினிமாவில் 1989 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக விஷால் அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் 2004 ஆம் ஆண்டு இயக்குனர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் 'செல்லமே' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இந்த படத்தைத் தொடர்ந்து சண்டைக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்தியம், 'அவன் இவன்' போன்ற படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றன. இதனால் தமிழ் திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் முன்னணி நடிகராக உருமாறினார்.
இந்த நிலையில் விஷால் நடிப்பில் 12 வருடங்களுக்குப் பின் வெளியாக உள்ள, 'மத கஜ ராஜா' திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட விஷால் மிகவும் ஒல்லியாக மாறி, முகம் வீங்கி, கைகள் நடுக்கத்துடன் வந்தார். இதனைக் கண்ட அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதிர்ச்சி தகவல்
இது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான செய்திகள் உலா வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் விஷால் தீவிர வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்காக முழு பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என அப்பல்லோ மருத்துவர் அறிக்கை வெளியானது.
இந்த நிலையில் நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, விஷாலின் மேலாளர் இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்த செய்தி முற்றிலும் தவறு.
விஷால் மருத்துவர் ஆலோசனைப்படி வீட்டிலிருந்து ஓய்வெடுத்து வருகிறார். ஓரிரு நாட்களில் முழுமையாகக் குணமாகி பூரண நலமுடன் இருப்பார் எனத் தெரிவித்தார்.