டாஸ்மாக்கில் மது வாங்க வந்தவர்களை அடித்து விரட்டிய விஷால் - டிரெண்டாகும் வீடியோ!

Vishal Tamil Cinema Viral Video TASMAC
By Sumathi Jan 17, 2024 07:40 AM GMT
Report

நடிகர் விஷால் குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

நடிகர் விஷால்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். தற்போது, இயக்குநர் ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்து வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.

actor vishal

இந்நிலையில், விஷாலின் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. ரத்னம் படத்திற்காக டாஸ்மாக் செட் போட்டிருக்கிறார்கள். அது செட் என்பது தெரியாமல் சிலர் மது வாங்க வரிசையில் நின்றிருக்கிறார்கள்.

நடிகை லட்சுமி மேனனுடன் திருமணம் - உறுதிசெய்த நடிகர் விஷால்!

நடிகை லட்சுமி மேனனுடன் திருமணம் - உறுதிசெய்த நடிகர் விஷால்!

வைரல் வீடியோ

அவர்களிடம் வந்து இது நிஜ டாஸ்மாக் கடை இல்லை, செட் என்று கூறி அடித்துவிரட்டியுள்ளார். மேலும், அதில் ஒரு இளைஞரை ஏற்கெனவே போதையில்தான் இருக்கே, இதில் இன்னும் போதை வேண்டுமா என கேட்டு அடிக்கிறார்.

இது என்னது என கேட்க அதற்கு அந்த இளைஞரோ டாஸ்மாக் கடை என சொல்ல, ஓங்கி அடித்து அட லூசு இது ரத்னம் படத்தின் செட்யா போயா போயா..டாஸ்மாக்குன்னு பேரு போட்டாலே எல்லாரும் வந்து நிற்கிறாங்க, போங்கயா என விரட்டுகிறார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.