விஜய்யுடன் அரசியல் கூட்டணி? விஷால் பரபரப்பு தகவல்!
விஜய்யுடன் அரசியல் கூட்டணி குறித்து விஷால் பேட்டியளித்துள்ளார்.
நடிகர் விஷால்
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என தனது அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் உற்றுநோக்கக் கூடிய ஒன்றாக மாறியுள்ளது.
இவரைத் தொடர்ந்து, நடிகர் விஷாலும் கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்ற தகவல் பரவிய நிலையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், மக்களுக்காகத் தொடர்ந்து பணி செய்வேன் என்றும், எதிர்காலத்தில் இயற்கை முடிவெடுக்க வைத்தால் தயங்க மாட்டேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.
விஜய்யுடன் கூட்டணி?
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசியல் என்பது பொதுப்பணி. மற்றத் துறைகளைப் போல பொழுதுபோக்கும் இடம் கிடையாது. மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்வதே அரசியல். 2026-ல் தேர்தல் வருகிறது. மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. நான் வரமாட்டேன். விஜய்க்கு வாழ்த்துக்கள்.
அவருடன் கூட்டணி குறித்து இப்போதே நான் எதையும் சொல்ல முடியாது. அந்த நேரத்தில் தான் அது பற்றி சொல்வது சரியாக இருக்கும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணம் தான் எல்லோருக்கும். இதற்கு நிறைய கட்சிகள் தேவையில்லை.
இப்போது இருப்பதே அதிகம். அதனைத் தாண்டி ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்பதை இதையும் தாண்டி என்னால் மக்களுக்கு செய்ய முடியும் என்ற நம்பிக்கையில்தான்” எனத் தெரிவித்துள்ளார்.