பால்கனியில் நிர்வாணமாக ரகளை செய்த பிரபல நடிகர் - வைரலான வீடியோவால் சர்ச்சை!
நடிகர் விநாயகன் போதையில் நிர்வாணமாக நின்ற வீடியோ வேகமாக பரவி வருகிறது.
நடிகர் விநாயகன்
கேரளாவைச் சேர்ந்தவர் நடிகர் விநாயகன். மிழ் சினிமாக்களில் வில்லன் வேடத்தில் நடித்துப் பிரபலமானவர். சமீபத்தில் ஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
இவர் அவ்வப்போது சர்சைக்குரிய கருதுக்களை பேசி விவாதத்தில் சிக்கிக்கொள்வது வழக்கம். இந்நிலையில், கொச்சியில் உள்ள தனது வீட்டு பால்கனியில் விநாயகன் நிர்வாணமாக நிற்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் சர்ச்சை
அதில் நடிகர் விநாயகன் பச்சை நிற லுங்கியை உடுத்துவதும், ஆடையை அவிழ்த்து நிர்வாண போஸில் பால்கனியில் நடப்பதும், கீழே அமர்ந்திருப்பதும், சிலரைத் திட்டுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
എന്തുവാടേയ് ഇതൊക്കെ....ഫുൾ കിളിയും പോയോ ?#vinayakan pic.twitter.com/Eut0mFz7Dq
— 𝗦𝗶𝗷𝗼 𝗝𝗼𝘀𝗲𝗽𝗵 (@sijo_jsp) January 20, 2025
இந்த வீடியோவை அவரது வீட்டுக்கு அருகில் மற்றொரு பால்கனியில் இருந்து யாரோ எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. தற்போது இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விநாயகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.