பிரபல நடிகையுடன் காதல்..விரைவில் திருமணம் செய்யப்போகும் வினய்? - வைரலாகும் புகைப்படங்கள்
கடந்த 2007-ம் ஆண்டு வெளிவந்த உன்னாலே உன்னாலே படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் வினய் ராய். அதன் பின் தொடர்ந்து ஜெயம் கொண்டான், ஒன்பதுல குரு, என்றென்றும் புன்னகை, அரண்மனை, துப்பறிவாளன் போன்ற படங்களில் நடித்தார்.
42 வயதாகும் வினய் சிறிது காலம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து தனது இரண்டாம் இன்னிங்கை கலக்கலாக துவங்கியுள்ளார்.

இயக்குனர் மிஷ்கினின் துப்பறிவாளன் படத்தில் முதன் முதலில் வில்லனாக நடித்த வினய்க்கு பாராட்டுக்கள் குவிந்த நிலையில் அடுத்ததாக டாக்டர், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களிலும் வில்லன் தோற்றத்தில் நடித்து தன் அசாத்திய நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்த வில்லனாக மாறியிருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் வினய் நடிகை விமலா ராமனை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


40 வயதாகும் விமலா தமிழில் சேரன் ஜோடியாக ராமன் தேடிய சீதை படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரீட்சியமானார்.
கடந்த சில ஆண்டுகலாக காதலித்து வரும் இவர்கள் இருவரும் மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு ஒன்றாக சுற்றுலா சென்றுள்ளனர், அந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan