“நான் போகிறேன் மேலே..மேலே மொமண்ட்” - ஸ்டைலிஷாக விமானம் ஓட்டும் வினய் : லைக்சுகளை அள்ளும் வீடியோ
கடந்த 2007-ம் ஆண்டு வெளிவந்த உன்னாலே உன்னாலே படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் வினய் ராய். அதன் பின் தொடர்ந்து ஜெயம் கொண்டான், ஒன்பதுல குரு, என்றென்றும் புன்னகை, அரண்மனை, துப்பறிவாளன் போன்ற படங்களில் நடித்தார்.
42 வயதாகும் வினய் சிறிது காலம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து தனது இரண்டாம் இன்னிங்கை கலக்கலாக துவங்கியுள்ளார்.
இயக்குனர் மிஷ்கினின் துப்பறிவாளன் படத்தில் முதன் முதலில் வில்லனாக நடித்த வினய்க்கு பாராட்டுக்கள் குவிந்த நிலையில் அடுத்ததாக டாக்டர், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களிலும் வில்லன் தோற்றத்தில் நடித்து தன் அசாத்திய நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்த வில்லனாக மாறியிருக்கிறார்.
இந்நிலையில், தற்போது, நடிகர் வினய் விமானம் ஓட்டும் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் நடிப்பதோடு மட்டுமில்லாமல் வினய் விமானமும் ஒட்டுகிறாரா என தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.