சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் நடிகர் விமலின் மனைவி? விருப்ப மனுத்தாக்கல்
திமுக சார்பில் மணப்பாறை தொகுதியில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி அக்ஷயா மனுத்தாக்கல் செய்துள்ளார். களவாணி, வாகை சூட வா போன்ற படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகர் விமல். கிராமத்து கதைக்களம் கொண்ட படங்களில் நடித்து கிராம மக்கள் மத்தியில் இடம்பிடித்தார் விமல். கொரோனா காலத்திலும் கூட, மணப்பாறையில் நண்பர்களுடன் சேர்ந்து வீதியில் கிருமிநாசினி தெளித்தார்.
தொடர்ந்து நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவி அக்ஷயாவும், ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளித்தார்.
இந்நிலையில் மணப்பாறை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.
விமலும் அவரது மனைவி அக்ஷயாவும் நடிகர்-தயாரிப்பாளர் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து விருப்ப மனுவை ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.