போலீசுக்கு சென்ற நடிகர் விமல் - செல்பி எடுக்கும் கேப்பில் செல்போனை திருடிய மர்ம நபர்
திருமண நிகழ்ச்சியில் நடிகர் விமலின் விலை உயர்ந்த செல்போன் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
களவாணி, பசங்க, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா உள்பட பல தமிழ்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விமல் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில் கடந்த 12 ஆம்தேதி கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டேன். அப்போது ரசிகர்கள் என்னுடன் செல்பி எடுத்து கொண்டனர். அப்போது என்னுடைய விலை உயர்ந்த செல்போனை அங்கு அமர்ந்திருந்த இடத்தில் வைத்திருந்தேன்.
திரும்பி வந்து பார்த்த போது விலை உயர்ந்த செல்போன் காணாமல் போனது. அதன் பிறகு கடந்த 3 நாட்களாக தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே காவல்துறை என்னுடைய செல்போனை கண்டுபிடித்து தரும்படி கேட்டு கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.