தமிழக கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற பிரபல தமிழ் நடிகரின் மகன் - ரசிகர்கள் வாழ்த்து!

Jiyath
in பிரபலங்கள்Report this article
நடிகர் விக்ராந்த்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விக்ராந்த். இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்தக்கூடியவர்.
ஏற்கனவே சிசிஎல் கிரிக்கெட் போட்டிகளிலும் அபாரமாக விளையாடி அசத்தியுள்ளார். தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் 'லால் சலாம்’ திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார்.
நெகிழ்ச்சி
இந்நிலையில் நடிகர் விக்ராந்தின் மகன் யஷ்வந்த் என்பவர் 14 வயதுக்கு உட்பட்ட தமிழக கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ளார்.
இதுகுறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள அவர், மகனை நினைத்து தனக்கு பெருமையாக இருப்பதாகவும்,
அவன் எதிர்காலத்தில் ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக வரவேண்டும் என்பதுதான் தனது கனவு என்றும், அதற்கு தனது வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் விக்ராந்த் மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
You May Like This Video