முதல்வரை சந்தித்த நடிகர் விஜய்சேதுபதி - எதற்கு தெரியுமா?
புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக நடிகர் விஜய் சேதுபதி சந்தித்து பேசினார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா என இரு கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் லலித் குமார் உடன் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் அனிருத் இசையில் உருவான ஃப்ர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த டிசம்பர் மாதமே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு கொரானா ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து மீண்டும் படப்பிடிப்பு புதுச்சேரி பகுதியில் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு நடித்து வரும் விஜய் சேதுபதி, மரியாதை நிமித்தமாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்தார். முதல்வரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் சில முக்கிய விஷயங்கள் பேசியதாக கூறப்படுகிறது.