கெத்தா, மாஸா அப்படியே சென்னை திரும்பிய நடிகர் விஜயகாந்த் - ரசிகர்கள் உற்சாகம்
துபாயில் மருத்துவ சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை சென்னை திரும்பினார் விஜயகாந்த். தேமுதிக நிறுவனரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
இதையடுத்து மருத்துவ சிகிச்சைக்காக அவர், கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி தனது இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் குமார் மற்றும் உதவியாளர்களுடன் துபாய் புறப்பட்டு சென்றார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விஜயகாந்த் மனைவி பிரேமலதா இம்மாதம் 3-ம் தேதி அதிகாலை விமானத்தில் துபாய் சென்றாா்.

சிகிச்சைக்கு இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகாந்த் குணமடைந்து நல்ல நிலையில் மருந்துவமனையில் சத்ரியன் படம் பாா்த்து கொண்டிருப்பது போல புகைப்படம் வெளியானது.
தற்போது விஜயகாந்த் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பி உள்ளார். விஜயகாந்த் துபாய் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை 2.30 மணிக்கு எமிரேட்ஸ் விமானத்தில் சென்னை திரும்பினார்.
அரசுக்கு ரூபா 800 மில்லியன் இழப்பு : அர்ஜூன மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் IBC Tamil
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரம் :200 அடி பள்ளத்தாக்கில் விழுந்த இராணுவ வாகனம்: பத்து வீரர்கள் உயிரிழப்பு IBC Tamil