நல்லா சென்ற விஜயகாந்த் காதலை வில்லனாக பிரித்த அந்த 2 நண்பர்கள் இவர்கள்தானாம்..!

Vijayakanth
By Nandhini Dec 30, 2022 01:00 PM GMT
Report

நடிகர் விஜயகாந்த் காதலை பிரித்த அந்த 2 நண்பர்கள் குறித்து தற்போது சமூகவலைத்தளங்களில் தகவல் தீயாய் பரவி வருகிறது.

நடிகர் விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக1980-90-கள், மற்றும் 2000-ஆண்டுகளில் கொடிக்கட்டி பறந்து பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த்.

சினிமாவை தொடர்ந்து தேமுதிக என்ற கட்சியை உருவாக்கிய விஜயகாந்த் முழுநேர அரசியலில் ஈடுபட்டார். அதன் பின் சந்தித்த முதல் தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே தேமுதிக வெற்றி பெற்றாலும், அடுத்த தேர்தலில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமர்ந்தது. இவருடன் கூட்டணி வைக்க, அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஆர்வம் காட்டின.

இதற்கிடையில், திடீரென்று விஜயகாந்த்திற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால், அவர் அரசியலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கினார். இதனையடுத்து, கட்சியும் வீழ்ச்சி அடைந்தது.

actor-vijayakanth-love-story-viral-news

காதலுக்கு வில்லன்களாக இருந்த நண்பர்கள்

இந்நிலையில், நடிகர் விஜயகாந்த் குறித்து ஒரு செய்தி சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

நல்ல நடிகராக விஜயகாந்த் இருக்கிறார் என்றால் அதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தவர், அவருடைய நெருங்கி நண்பரும் தயாரிப்பாளருமான இப்ராஹிம் ராவுத்தர் தான். வில்லனாகவே நடித்துக் கொண்டிருந்த விஜயகாந்தை, ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விஜயகாந்திடம் புகுத்தியவர் இப்ராஹிம்தான்.

இவரைப்போலவே விஜயகாந்த் மேல் அக்கறை கொண்டவராக இருந்தவர் தயாரிப்பாளர் லியாகத் அலி. ஆனால், இவர்கள் இருவருமே இப்போது, விஜயகாந்தை விட்டு பிரிந்து இருக்கின்றனர். அதற்கு சில காரணங்கள் இருக்கிறது. விஜயகாந்தின் காதலுக்கு வில்லன்களாக இருந்தவர்கள் இவர்கள் இரண்டு பேர்தானாம். இதை லியாகத் அலி ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

விஜயகாந்த் நடிப்பில் பிஸியாக இருந்த நேரத்தில், ஒரு நடிகையை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். அந்த நடிகையின் பெயர் ‘ரா’ என்ற எழுத்தில் இருக்கும். அந்த நடிகையும், விஜயகாந்த் மீது அதிக அளவு காதலில் இருந்துள்ளார்.

இவர்கள் காதல் திருமணம் வரை சென்றது. ஆனால், அந்த நேரத்தில் இதெல்லாம் சரிவராது என்று சில பொய்களை கூறி, அந்த நடிகையிடமிருந்து விஜயகாந்தை பிரித்தனர்.

நண்பர்கள் சொல்வதை மீறாத விஜயகாந்தும் அந்த நடிகையிடம் கூறி இருவரும் பிரிந்து விட்டார்களாம். ஆனால், அந்த நடிகைக்கு விஜயகாந்த் பிரிந்ததற்கு இவர்கள் இருவரும்தான் என்று தெரியாதாம். விஜயகாந்தே யோசித்து இந்த முடிவை எடுத்ததாகதான் நினைத்துக் கொண்டிருந்தாராம்.

இது குறித்து லியாகத் அலி ஒரு பேட்டியில் கூறும்போது, ஒரு சந்திப்பில் நான் அந்த நடிகையை பார்த்து தயங்கி தயங்கி நின்றேன். அப்போது, அவரே என் பக்கம் வந்து நீங்கள் ஏன் தயங்கி நிற்கிறீர்கள். விஜி தான் அப்படி செய்து விட்டாரே. அதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள் என்று சொன்னதாக கூறினார். தற்போது இது தொடர்பான செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

actor-vijayakanth-love-story-viral-news