சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டுக்குள் நடிகர் விஜயகாந்த் தரையில் அமர்ந்து தர்ணா - வேறு வழியின்றி ஒப்புக்கொண்ட ரஜினி

Rajinikanth Vijayakanth Tamil Cinema
By Thahir Mar 11, 2023 04:16 AM GMT
Report

1980 மற்றும் 90களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விஜயகாந்த். 1978 முதல் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய இவருக்கு பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது.

பொறுப்பேற்ற விஜயகாந்த்

இவரின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் வெளிவந்து வெற்றியை பெற்று வசூலை ஈட்டியது. கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் இவருக்கு கேப்டன் என்னும் அடை மொழியை பெற்று தந்தது.

நடிகர் சங்கத்தின் தலைவராக நடிகர் விஜயகாந்த் இருந்த போது கடனை அடைக்க பல திட்டங்களை வகுத்தார். வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்துவது அதில் முக்கியமான திட்டமாகும்.

பல வருடங்களாகவே வங்கியில் வாங்கி கடனை கட்ட முடியாமல் விழி பிதுங்கியிருந்தது நடிகர் சங்கம். அனைத்து பிரபலங்களும் நடிகர் சங்கத்தை கைவிடப்பட்ட சூழலில் என்ன செய்வது என்று திகைத்து நின்றிருக்கிறார் அப்போதைய நடிகர் சங்க தலைவர் ராதாரவி.

கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த்தை அமர வைத்து பொறுப்பையும் தந்துள்ளார் ராதாரவி.

இதையடுத்து நடிகர் சங்க தலைவராக வந்த விஜயகாந்த் உடனடியாக கடனை அடைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் கையில் எடுத்துள்ளார் விஜயகாந்த்.

ரஜினி வீட்டுக்குள் தரையில் அமர்ந்து தர்ணா

தமிழர்கள் அதிகம் வசிக்கும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இதற்காக ஒவ்வொரு நடிகர்களையும் நேரில் சென்று அழைத்திருக்கிறார். அப்போது தான் ரஜினி வீட்டுக்குள் நேராக போய் அங்கு தரையில் உட்கார்ந்து கொண்டாராம் விஜயகாந்த்.

அண்ணே நிகழ்ச்சிக்கு நீங்க கண்டிப்பா வர வேண்டும் மறுக்க கூடாது என்று தரையில் அமர்ந்து கொண்டார். நீங்கள் ஒப்புதல் கொடுத்தால் தான் ஷோபாவில் உட்காருவேன் என்றும் விஜயகாந்த் கூறிவிட்டார்.

actor-vijayakanth-inside-rajini-s-house-protest

உடனே மனம் நெகிழ்ந்த ரஜினிகாந்த்தும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஒப்புக் கொண்டுள்ளார். இப்படி ஒவ்வொரு முயற்சிகளையும் எடுத்து, கலை நிகழ்ச்சிகளை நடித்தி நடிகர் சங்க கடனையும் அடைத்துள்ளார்.

விஜயகாந்த். அத்தோடு சங்கத்திற்கான வைப்பு தொகையையும் சேர்த்து வைத்துள்ளார். பிறகு விஜயகாந்த் திடீரென கட்சியை ஆரம்பித்து விட்டார்.

தீவிர அரசியலில் இருந்து கொண்டு நடிகர் சங்க தலைவராக செயல்படுவது சரி வராது என்பதால தானாகவே முன்வந்து அந்த பொறுப்பில் இருந்து விலகியுள்ளார் நடிகர் விஜயகாந்த்.