நான் நல்லா இருக்கேன்- டி ஷர்ட், கூலிங் கிளாஸுடன் மாஸாக இருக்கும் விஜயகாந்த்

actor save vijayakanth good
By Anupriyamkumaresan Sep 05, 2021 05:47 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

 தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தான் ஆரோக்கியமாக உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளதுடன், தன்னுடைய புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த படம் தற்போது வைரலாகி வருகிறது.

தே.மு.தி.க. தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமானவர் நடிகர் விஜயகாந்த். அவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவ பரிசோதனைக்காக துபாய் சென்றார்.

நான் நல்லா இருக்கேன்- டி ஷர்ட், கூலிங் கிளாஸுடன் மாஸாக இருக்கும் விஜயகாந்த் | Actor Vijayakanth Hospital Photo Viral

அவருடன் அவரது மகன் மற்றும் உதவியாளர்கள் உடன் சென்றனர். இந்த நிலையில், விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த படத்தில் நான் நல்ல உடல்நலத்துடன் உள்ளேன். நான் நடித்த சத்ரியன் திரைப்படத்தை எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் நடிகர் விஜயகாந்த் டி சர்ட், பேண்ட் மற்றும் கருப்பு கண்ணாடி அணிந்து அமர்ந்துள்ளார். அவரது இந்த படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தால் அவரது ரசிகர்களும், தே.மு.தி.க. தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.