நடனத்தில் மைக்கேல் ஜாக்சனுக்கு டஃப் கொடுத்த கேப்டன் 'விஜயகாந்த்' - வைரலாகும் வீடியோ!
கேப்டன் விஜயகாந்தின் புன்னகையில் மின்சாரம் பாடல் குறித்த சிறப்புகள்.
கேப்டன் விஜயகாந்த்
கடந்த 1979ம் ஆண்டு வெளியான 'அகல் விளக்கு' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் விஜயகாந்த். இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சண்டை காட்சிகளையும், ஸ்டண்ட்களையும் அசால்ட்டாக செய்வதில் வல்லவர். பின்னர் அரசியலில் கால்பதித்து 'தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்' என்ற கட்சியை தொடங்கினார். தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு வெளியுலகில் அதிகம் தோன்றாமல் இருக்கிறார் விஜயகாந்த்.
இவர் சிறந்த நடிப்புக்கும், சண்டை காட்சிகளுக்கும் புகழ்பெற்றவர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் நடனத்திலும் சிறந்தவர் என்பது பலருக்கு தெரியாது. கடந்த 1992ம் ஆண்டு விஜயகாந்த், பானுப்ரியா நடிப்பில் 'பரதன்' என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
வைரலாகும் வீடியோ
இந்த படத்திலுள்ள 'புன்னகையில் மின்சாரம்' என்ற பாடலுக்கு விஜயகாந்த் சிறப்பாக நடனம் ஆடியிருப்பார். நடன இயக்குநர் பிரபுதேவா இந்த பாடலுக்கு நடனம் அமைத்திருந்தார். மேலும் இந்த பாடலின் சிறப்பு என்னவென்றால், தமிழ் சினிமாவில் அதிகமான ஷாட்ஸ் பயன்படுத்தப்பட்ட ஒரே பாடல் இதுதான்.
அதிக ஷாட்ஸ் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட 180 கட்ஸ்கள் இதில் உள்ளன. விஜயகாந்தா இப்படி ஆடியிருக்கிறார்..! என்று நம்மை வியப்பில் ஆழ்த்தும் அந்த பாடல் இப்போது வைரலாகி வருகிறது. மைக்கேல் ஜாக்ஸனுக்கே கேப்டன் டஃப் கொடுத்திருக்கிறார் என்று ரசிகர்கள் பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.
நடன இயக்குநர் பிரபுதேவா விஜயகாந்த் குறித்து ஒரு நேர்காணலில் பேசியதாவது "விஜயகாந்த் சார் ஒரு நல்ல மனிதர். அவரைப்போன்ற ஒரு ஹீரோவை நான் பார்த்ததில்லை. படத்தில் மட்டுமல்லாமல் வெளியிலும் அவரை நாங்கள் அதிகளவு நேசிப்போம்" என்று பேசியுள்ளார்.