அப்பழுக்கற்ற அரசியல்வாதி பிறந்த தினம் இன்று - என்றைக்கும் கேப்டன் இவர்தான்!

vijayakanth birthday today
By Anupriyamkumaresan Aug 25, 2021 08:26 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

கேப்டன் விஜயகாந்த் என்றாலே இப்போதுள்ள இளைஞர்களுக்கு அவர் மீது நெகடிவ் இமேஜ் மட்டுமே இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை "மீம்" கிரியேட்டர்களின் நாயகனாகவே இருந்தார் விஜயகாந்த். அதற்கு காரணமாக இருந்தது அவரின் குரல் மற்றும் உடல்நிலை. ஆனால் இப்போது விஜயகாந்த் குறித்த மீம்கள் வருவது பெருமளவு குறைந்துள்ளது. எந்த இளைஞர்கள் அவர்களை எள்ளி நகையாடினார்களோ அதே இளைஞர்கள் அவரின் உடல்நிலையை இப்போது புரிந்துக்கொண்டனர். 

அப்பழுக்கற்ற அரசியல்வாதி பிறந்த தினம் இன்று - என்றைக்கும் கேப்டன் இவர்தான்! | Actor Vijayakanth Birthday Today

ஆனால், திரைத்துறையில் விஜயகாந்த் செய்துள்ள சாதனைகளும், எளிய மக்களுக்கு அவர் செய்த உதவிகளும் இன்றைய இளைஞர்களுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை. கேப்டன் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் விஜயகாந்த் இன்று தன்னுடைய 69 ஆவது பிறந்தநாளை கொண்டுடாடுகிறார். 

மதுரை திருமங்கலத்தில் 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி தான் கேப்டன் விஜயகாந்த் இந்த உலகத்தில் உதித்தார். தமிழ் திரைப்படங்கள் மீது ஏற்பட்ட தீராக்காதல் காரணமாக பள்ளிப்படிப்பை 10 ஆம் வகுப்புடன் நிறுத்திவிட்டார். இதனை தொடர்ந்து அப்பாவின் அரிசி ஆலையை கவனிக்கத் தொடங்கினார். ஆனாலும், விஜயகாந்துக்கு, மனம் முழுவதும் சினிமாவிலேயே இருந்தது. அதிலும் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்பதே அவரது கனவு.

அப்பழுக்கற்ற அரசியல்வாதி பிறந்த தினம் இன்று - என்றைக்கும் கேப்டன் இவர்தான்! | Actor Vijayakanth Birthday Today

தொடங்கியது சினிமா பயணம்:

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் மதுரையில் இருந்து 1978 இல் சென்னைக்கு வந்த விஜயகாந்த். ‘இனிக்கும் இளமை' படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். அவரை இயக்குநர் எம்.ஏ.காஜா கதாநாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகம் செய்தார். ஆனால் முதல் படம் அவருக்கு இனிமையை தரவில்லை. அடுத்தடுத்த படங்களின் நிலையும் இதேதான். ஆனால், விஜயகாந்த் சோர்ந்துப்போகவில்லை. தொடர்ந்து முயன்றுக்கொண்டே இருந்தார்.

கே.விஜயன் இயக்கத்தில் சலீல் சவுத்ரி இசையில் விஜயகாந்த் நடித்த "தூரத்து இடி முழக்கம்", பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பின்பு, எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் நடித்த "சட்டம் ஒரு இருட்டறை" பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து, பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

அப்பழுக்கற்ற அரசியல்வாதி பிறந்த தினம் இன்று - என்றைக்கும் கேப்டன் இவர்தான்! | Actor Vijayakanth Birthday Today

சாதனை படைத்த படங்கள்:

1990-களுக்குப் பிறகு விஜயகாந்த் தமிழ் திரையுலகின் அசைக்க முடியாத ஹீரோவானார். கேப்டனுக்கு முன்பாக புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் என அழைக்கப்பட்டதும், இந்தக் காலக்கடத்தில்தான். "அம்மன் கோயில் கிழக்காலே", "வைதேகி காத்திருந்தாள்" படங்கள் தமிழகமெங்கும் விஜயகாந்தை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்தது. அதன் பின் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வந்த "புலன் விசாரணை"யும், அதன் மேக்கிங்கும் அப்போது பெரிதும் பேசப்பட்டது. அதேபோல இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் வெளியான "சின்னக் கவுண்டர்" விஜயகாந்துக்கு பெயரும் புகழும் கொடுத்தது.  

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி - சாதனைக்கு தொடக்கப்புள்ளி:

ரஜினியின் 100-வது படம் "ராகவேந்திரா", கமலின் 100-வது படம் "ராஜ பார்வை" ஆகியவை மிகப்பெரிய வெற்றி பெறவில்லை. தமிழ் கதாநாயகர்களுக்கும் 100-வது படத்துக்கும் ராசியே இல்லை என்ற மூடநம்பிக்கையை தகர்த்தவர் விஜயகாந்த். ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், லியாகாத் அலிகான் வசனங்களில் விஜயகாந்தின் 100 ஆவது படமான "கேப்டன் பிரபாகரன்" தியேட்டர்களில் 200 நாள் ஓடி சாதனைப் படைத்தது. இது, பிரம்மாண்டமான படமாக அப்போது பேசப்பட்டது. இந்தப் படத்திற்கு பின்பே, ’கேப்டன்’ என்ற பெயர் விஜயகாந்தை தொற்றிக்கொண்டது.

அப்பழுக்கற்ற அரசியல்வாதி பிறந்த தினம் இன்று - என்றைக்கும் கேப்டன் இவர்தான்! | Actor Vijayakanth Birthday Today

விஜய்காந்த் மிகச் சிறந்த தேசப் பற்றுக்கொண்டவர். இது தனது படங்களின் வசனங்கள் மூலம் எதிரொலித்தது. இப்போது உடலும், குரலும் தளர்ந்து இருந்தாலும் அவர் மீண்டும் தன் கர்ஜனை குரலில் சினிமாவில் பேச வேண்டும் என்பது அவரின் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

அனைத்திலும் சிறந்த மனிதர்:

சினிமாவில் மட்டுமின்றி அரசியல் வாழ்க்கையிலும் சாதித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். மதுரை மண்ணுக்கு சொந்தமான இவர், தற்போது உடல்நிலை காரணமாக எதிலும் ஈடுபடாமல் இருந்தால் கூட, மக்கள் இருந்தில் இருந்து என்றும் வெளியேற மாட்டார்.

அப்பழுக்கற்ற அரசியல்வாதி பிறந்த தினம் இன்று - என்றைக்கும் கேப்டன் இவர்தான்! | Actor Vijayakanth Birthday Today

அப்பழுக்கற்ற அரசியல்வாதியாகவும், நிஜ வாழ்க்கையில் பொய்யாக நடிக்கத்தெரியாத நடிகர் கேப்டன் விஜயகாந்த் இன்று போல் இன்னும் நூறாண்டு பிறந்த நாள் கொண்டாட வாழ்த்துக்கள்..