இயக்குநர் நெல்சனை கட்டியணைத்த விஜய் - காரணம் கேட்டு நெகிழ்ந்த ரசிகர்கள்

beast actorvijay பீஸ்ட்
By Petchi Avudaiappan Dec 11, 2021 05:57 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் சம்பந்தமான காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’பீஸ்ட்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. அதனை தொடர்ந்து அண்மையில் 'பீஸ்ட்' படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்றது. சமீபத்தில் 'பீஸ்ட்' படப்பிடிப்பு நூறாவது நாள் நிறைவடைந்ததை அட்டகாசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் கொண்டாடினர்.

அதனை தொடர்ந்து 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ள நடிகை அபர்ணா தாஸ் தனது சமூக வலைத்தளத்தில் படத்தில் நடித்துள்ள ரெடின் கிங்ஸ்லி உடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து 'பீஸ்ட்’ படத்தின் சிங்கிள் பாடல் மிக விரைவில் வெளியாகும் என்று கூறியிருந்தார்.

இதனிடையே நேற்றைய தினம் படத்தின் கதாநாயகியான பூஜா ஹெக்டேவின் 'பீஸ்ட்' படத்திற்கான ஷூட்டிங் முடிந்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்திற்கான விஜய்யின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக புகைப்படத்துடன் படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குனர் நெல்சனை விஜய் கட்டிப்பிடித்துள்ள இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.