இணையதளத்தை கலக்கும் நடிகர் விஜய்யின் லேட்டஸ்ட் கிளிக் - வைரலாகும் புகைப்படம்…!

Vijay Viral Photos
By Nandhini Jan 22, 2023 06:41 AM GMT
Report

நடிகர் விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

‘வாரிசு’ படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் வெளியாகும் படங்களின் முதல் சிங்கிள் பாடல் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டால் அவை யூ-டியூப்பில் பெரிய சாதனையைப் படைத்து விடும்.

இவர் பாடலுக்கென்று ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'வாரிசு' படத்தின் முதல் சிங்கிளாக வெளியான 'ரஞ்சிதமே' பாடல் வெளியாகி 24 மணி நேரத்தில் 18.5 மில்லியன் பார்வைகளையும், 1.3 மில்லியன் லைக்குகளை கடந்து சாதனை படைத்தது.

கடந்த 11ம் தேதி வாரிசு திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் சாதனையிலும் முன்னிலையில் உள்ளது.

actor-vijay-viral-photo

லேட்டஸ்ட் கிளிக்

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் நடிகர் விஜய் ஒரு சிறுமியை தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.