ரசிகர்களை பார்த்து மாஸா Fly Kiss கொடுத்த விஜய் - இணையதளத்தில் தெறிக்க விடும் ரசிகர்கள்..!
ரசிகர்களை பார்த்து Fly Kiss கொடுத்த நடிகர் விஜய்யின் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
‘வாரிசு’ படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் வெளியாகும் படங்களின் முதல் சிங்கிள் பாடல் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டால் அவை யூ-டியூப்பில் பெரிய சாதனையைப் படைத்து விடும்.
இவர் பாடலுக்கென்று ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'வாரிசு' படத்தின் முதல் சிங்கிளாக வெளியான 'ரஞ்சிதமே' பாடல் வெளியாகி 24 மணி நேரத்தில் 18.5 மில்லியன் பார்வைகளையும், 1.3 மில்லியன் லைக்குகளை கடந்து சாதனை படைத்தது.
ரசிகர்களை பார்த்து Fly Kiss கொடுத்த விஜய்
‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. வழக்கமாக ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்யின் ஹைலைட்டாக அமையும். ஆனால் நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் அரசியல் நெடி இல்லாமல் சிம்பிளாக விஜய் பேசினார். என்றாலும் வழக்கம்போல் குட்டிக்கதை ஒன்றையும் விஜய் கூறினார்.
இந்நிலையில், இந்த விழாவில் நடிகர் விஜய் ரசிகர்களை பார்த்து fly Kiss கொடுத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல் விஜய் எடுத்த செல்பி புகைப்படமும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் குஷியில் குதித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.