விஜய்க்கு அபராதம்! அதிரடி காட்டிய நீதிமன்றம்

Vijay
By Fathima Feb 06, 2026 05:30 AM GMT
Report

புலி படத்திற்காக வாங்கிய 15 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்ததற்காக வருமான வரித்துறையினர் விதித்த அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.

கடந்த 2015- 16ம் ஆண்டுக்கான வருமானமாக நடிகர் விஜய் 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் என கணக்கு காட்டியிருந்தார்.

இந்நிலையில் அவரது வீட்டிலும், அலுவலகத்திலும் நடந்த சோதனையில் முக்கியமான ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.

விஜய்க்கு அபராதம்! அதிரடி காட்டிய நீதிமன்றம் | Actor Vijay Tax Penalty Case Verdict Today

அதனை ஒப்பிட்டு பார்த்ததில் 15 கோடி ரூபாய் கணக்கில் காட்டாமல் இருப்பது கண்டறியப்பட்டதால் 1 கோடியே 50 லட்ச ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், வருமான வரித்துறையினரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.

இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

விஜய்க்கு அபராதம்! அதிரடி காட்டிய நீதிமன்றம் | Actor Vijay Tax Penalty Case Verdict Today  

அதிரடி உத்தரவு

அதாவது 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார், மேலும் அபராதம் விதிக்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை, விதிகளுக்கு உட்பட்டு தான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றார்.