நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு
புலி படத்திற்காக வாங்கிய 15 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்ததற்காக வருமான வரித்துறையினர் விதித்த அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.
கடந்த 2015- 16ம் ஆண்டுக்கான வருமானமாக நடிகர் விஜய் 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் என கணக்கு காட்டியிருந்தார்.
இந்நிலையில் அவரது வீட்டிலும், அலுவலகத்திலும் நடந்த சோதனையில் முக்கியமான ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.

அதனை ஒப்பிட்டு பார்த்ததில் 15 கோடி ரூபாய் கணக்கில் காட்டாமல் இருப்பது கண்டறியப்பட்டதால் 1 கோடியே 50 லட்ச ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், வருமான வரித்துறையினரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.
இந்நிலையில் இன்று அந்த வழக்கின் மீதான தீர்ப்பை இன்று நீதிபதி வழங்கவுள்ளார்.
