ஒரு தலைவன் உருவாகிவிட்டானா ? : நாடறிந்த நடிகர் விஜய் நாடாளுவாரா?

Vijayan
By Irumporai Jun 17, 2023 06:37 AM GMT
Report

ஒரு தலைவன் உருவாக ஒரு யுகமே தேவைப்படுது என விஜய் மெர்சல் படத்தில் பேசியது அவரது அரசியல் பயணத்தை தொடங்கி விட்டதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட அவரது வீட்டில் நடந்த சோதனைகள் அவரை அரசியலுக்கு கொண்டு வந்து விட்டதாக கூறப்பட்டது, இந்த நிலையில் சினிமாவும் தமிழக அரசியலில் பற்றியும் விஜய் குறித்தும் விளக்குகின்றது இந்த தொகுப்பு.

சினிமா அரசியல்

தமிழக அரசியலுக்கும் சினிமா துறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு , சொல்லப்போனால் திராவிட கட்சிகள் தங்களின் கொள்கைகளை பரப்ப மிகப்பெரிய ஊடகமாக கருவியாக சினிமா இருந்துள்ளது. தமிழ்நாடு அரசியல் களத்தில் திரைத்துறை சாராத முதலமைச்சர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது.

அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் ஆகிய முதலமைச்சர்கள் திரைத்துறையில் கால்பதித்தவர்கள்தான். அதே சமயம் திறைத்துறையில் முடி சூடா மன்னர்களக இருந்தவர்கள் அரசியல் துரையிலும் வாகை சூட முடியவில்லை , நடிகர் திலகமென கொண்டாடப்பட்ட சிவாஜி கணேசன் அரசியல் சிம்மாசனத்தில் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஒரு தலைவன் உருவாகிவிட்டானா ? : நாடறிந்த நடிகர் விஜய் நாடாளுவாரா? | Actor Vijay Students Vijay Makkal Iyakkam

அதன் பிறகு தனது கம்பீர குரலாலும் நடிப்பாலும் கேப்டன என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த் நடிப்பில் காட்டிய அதிரடியை சட்டமன்றத்தில் காட்டியதால் எதிர்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் பரபரப்பாக பேசப்பட்டார். ஆனால் அதன்பிறகு அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு அவரை தீவிர அரசியலில் இயங்க முடியாமல் செய்துவிட்டது. 

சினிமாவில் சிங்கமாக ஜொலித்தாலும் அரசியல் சதுரங்கத்தில் நடிகர்கள் கொஞ்சம் தளர்ந்துதான் போகின்றார்கள் .அண்ணா முழுநேர அரசியல் களத்தில் தனது 26 வது வயதில் இருந்து இயங்கத் தொடங்கினார். திரைத்துறையில் திராவிட இயக்க ஆதரவு வசனங்களால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் அண்ணா. அண்ணாவின் பேச்சாற்றல் அவர் செல்லுமிடங்களிலெல்லாம் அவருக்கு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. தீவிர அரசியலில் மக்களின் பேரதரவைப் பெற்ற அண்ணா அரியணையில் அமர 30 ஆண்டுகாலம் ஆனது

ஒரு தலைவன் உருவாகிவிட்டானா ? : நாடறிந்த நடிகர் விஜய் நாடாளுவாரா? | Actor Vijay Students Vijay Makkal Iyakkam

. தனது 14 ஆம் வயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியில் பேச்சினால் ஈர்க்கப்பட்ட அரசியல் பயணத்தைத் தொடங்கியவர் கருணாநிதி. 1957 ஆண்டு முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கருணாநிதி தான் போட்டியிட்ட அனைத்து சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றிபெற்றவர். 1967 ஆம் ஆண்டு அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்ற போது பொதுப்பணித்துறை அமைச்சரான கருணாநிதி, அண்ணாவின் மறைவிற்குப்பிறகு 1969 ஆம் ஆண்டு முதலமைச்சர் பொறுப்பேற்றார்.

முதலமைச்சர் சினிமா

29 ஆண்டுகால அரசியல் பங்களிப்பு அவருக்கு முதலமைச்சர் பதவியை பெற்றுத்தந்தது. அண்ணாவும் கருணாநிதியும் திரைத்துறையில் கோலோச்சினாலும் திரையில் நாயகர்களாக தோன்றியதில்லை. ஆனால் இவர்களுக்குப்பின்னால் முதலமைச்சரான எம்.ஜி.ஆர். தனது நேர்மறை நடிப்பால் ஏழைகளின் பங்காளனாக கொண்டாடப்பட்டார். காந்திய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த எம்.ஜி.ஆரை அண்ணாவின் பேச்சு திமுகவில் இணையச் செய்தது. 1952 முதல் தீவிர அரசியலில் ஈடுபட்ட எம்ஜிஆர், முதலமைச்சராக 25 ஆண்டுகள் உழைக்க வேண்டியிருந்தது.

ஒரு தலைவன் உருவாகிவிட்டானா ? : நாடறிந்த நடிகர் விஜய் நாடாளுவாரா? | Actor Vijay Students Vijay Makkal Iyakkam

1977ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து, எம்.ஜி.ஆர் தனது 60 வது வயதில் முதலமைச்சரானார். இவர்களைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரால் 1982 ஆம் ஆண்டு அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட ஜெயலலிதாவும் பல சோதனைகளைக் கடந்து 1991 ஆம் ஆண்டு முதலமைச்சரானார்.

அதன்பின்னர் சரத்குமார், டி.ராஜேந்தர், கார்த்திக், கமல் என அரசியல் பாதையில் வாகனத்தைத் திருப்பிய நடிகர்களின் பட்டியல் நீண்டது. அப்படிப்பட்ட சூழலில் தான் நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்களை கடந்த 2009 ஆம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு பல இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளனர்.

ஒரு தலைவன் உருவாகிவிட்டானா ? : நாடறிந்த நடிகர் விஜய் நாடாளுவாரா? | Actor Vijay Students Vijay Makkal Iyakkam

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு அரசியல் களத்தில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற முனைப்பில் செயல்பாடுகளில் தீவிரம் காட்டி வரும் அவர், கடந்த மே மாதம் 28ஆம் தேதி உலக பசி தினத்தை ஒட்டி 234 தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் மதிய உணவு வழங்கினார்.

விஜய் மக்கள் இயக்கம்

அதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி உள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தின் ஒவ்வொரு நகர்வும் விஜயின் அதிகாரப்பூர்வ அரசியல் பிரவேசத்திற்கான அடிப்படையாகவே கவனிக்கப்பட்டு வருகிறது. 49 வயதாகும் விஜய் 35 வயது முதல் தனது இயக்கம் மூலமாக அறப்பணிகளில் ஈடுபட்டாலும் இன்னும் தீவிர அரசியலுக்கு களமிறங்கவில்லை.

பெரியார் அம்பேத்கர்

அவரது ரசிகர்களுக்கு அவர் முதலமைச்சராக வேண்டும் என்கிற கனவு இருக்கிறது. குறிப்பாக இன்றைய நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களை பற்றி மாணவ, மாணவிகள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என பேசினார் மேலும் பெரிய பொறுப்புணர்ச்சி வந்ததைப் போல உணர்கிறேன் எனக் கூறிய விஜய் வாருங்கால வாக்களர்கள் ஆகிய நீங்கள் வாக்கினை காசு விற்கும் அவளத்தை தடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த கருத்துதான் தற்போது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது , அதே சமயம் இலவச திட்டங்கள் சமூக சேவைகள் ஆகியவை சமூகவலைத்தளங்களில் பேசு பொருளாகும் ஆனால் அவை வாக்குகளாக மாறுமா என்பது சந்தேகமே , தற்போது 49 வயதாகும் விஜய் 35 வயது முதல் தனது இயக்கம் மூலமாக அறப்பணிகளில் ஈடுபட்டாலும் இன்னும் தீவிர அரசியலுக்கு களமிறங்கவில்லை.

அவரது ரசிகர்களுக்கு அவர் முதலமைச்சராக வேண்டும் என்கிற கனவு இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டு அரசியல், மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு தேடி, களத்தில் செயல்பட்டவர்களையே கரையேற்றி இருக்கிறது என்பது கடந்தகால வரலாறு திரைத்துறை எனும் சிகரத்தில் தளபதியாக கொடி நாட்டிய விஜய் அரசியல் சிம்மாசனத்தை அலங்கரிப்பாரா , ஒரு தலைவனாக உருவாகிவிட்டார விஜய் அதற்கான பதிலை இனி வரும் காலங்கள் தான் கூற வேண்டும்...