Friday, Jun 6, 2025

களத்தில் இறங்கிய நடிகர் விஜய் - மாணவர்களுக்கு இரவு நேர பாடசாலையை தொடங்குகிறார்

Vijay Tamil nadu Education
By Thahir 2 years ago
Report

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டத்தை தொடர்ந்து இரவு பாடசாலை திட்டத்தை நடிகர் விஜய் தொடங்க உள்ள தாகதகவல் வெளியாகியுள்ளது.

இரவு நேர பாடசாலை தொடங்கும் விஜய் 

கடந்த மாதம் 17 ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் 10, 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.

Actor Vijay starts night school for students

இதனை தொடர்ந்து காமராஜர் பிறந்த நாள் அன்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரவு நேர பாடசாலையை தொடங்க உள்ளார்.

Actor Vijay starts night school for students

படிப்பகம், பயிலகம், கல்வியகம், அறிவொளியகம் என்ற பெயர்களிலர் ஒன்றை இத்திட்டத்திற்கு வைக்க நடிகர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.