இணையத்தில் வைரலாகி வரும் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்யின் வீடியோ..! ரசிகர்கள் வரவேற்பு..!

son sanjai viralvideo actor vijay
By Anupriyamkumaresan Jun 04, 2021 06:29 AM GMT
Report

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்யின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஜய். உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவர், அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார்.

இவரது மகன் சஞ்சய், கனடாவில் உள்ள திரைப்பட கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். படித்து முடித்த பிறகு இயக்குனராகவோ அல்லது நடிகராக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இணையத்தில் வைரலாகி வரும் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்யின் வீடியோ..! ரசிகர்கள் வரவேற்பு..! | Actor Vijay Son Sanjay Video Viral

இவர் விஜய் நடிக்கும் படத்தின் பாடல்களில் அறிமுகமாவார். அந்த வகையில், விஜய் மற்றும் அசின் நடித்த ’போக்கிரி’ திரைப்படத்தில் உள்ள ’வசந்த முல்லை’ பாடலின் கடைசியில் ’சஞ்சய் விஜய்’ சிறு குழந்தையாக ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து ’வேட்டைக்காரன்’ திரைப்படத்தின் ’நான் அடிச்சா தாங்க மாட்ட’ பாடலில் தந்தையுடன் சேர்ந்து நடனமாடி ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார்.

இணையத்தில் வைரலாகி வரும் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்யின் வீடியோ..! ரசிகர்கள் வரவேற்பு..! | Actor Vijay Son Sanjay Video Viral

இந்நிலையில் சஞ்சஞ் விஜய் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அதில் சஞ்சய் பாடல் கேட்டுக்கொண்டே கார் ஓட்டிச் செல்வது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் லைக்குகள் அள்ளி வீசி வருகின்றனர்.