இணையத்தில் அப்பாவுக்கு போட்டியாக வரும் விஜய்யின் மகன் - மீண்டும் டிரண்டிங்கில் ஜேசன் சஞ்சய்!

son viral sanjay actor vijay
By Anupriyamkumaresan Jun 15, 2021 09:51 AM GMT
Report

அட்லி இயக்கிய தெறி படப்பிடிப்பின்போது ஜேசன் சஞ்சய்யும், திவ்யா சாஷாவும் மொட்டை ராஜேந்திரனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் குறித்து தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் அவர், ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்படும் போட்டாக்களும், வீடியோக்களும் தான்.

இணையத்தில் அப்பாவுக்கு போட்டியாக வரும் விஜய்யின் மகன் - மீண்டும் டிரண்டிங்கில் ஜேசன் சஞ்சய்! | Actor Vijay Son Sanjay Photo Viral

இந்நிலையில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த, தெறி படப்பிடிப்பின்போது மொட்டை ராஜேதந்திரனுடன் சேர்ந்து ஜேசன் சஞ்சய் மற்றும் அவரின் தங்கை திவ்யா சாஷா போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தெறி படத்தின் கடைசி காட்சியில் விஜய்யின் மகள் திவ்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக பாட்டு கேட்டுக் கொண்டே ஜேசன் சஞ்சய் கார் ஓட்டிய வீடியோ வெளியாகி இணையத்தை கலக்கியது.

இணையத்தில் அப்பாவுக்கு போட்டியாக வரும் விஜய்யின் மகன் - மீண்டும் டிரண்டிங்கில் ஜேசன் சஞ்சய்! | Actor Vijay Son Sanjay Photo Viral

அதன் பிறகு அவர் தன் நண்பன், நண்பியுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய வீடியோவும், செல்ஃபியும் வெளியாகி வைரலானது.

இருக்கும் இடம் தெரியாமல் வளர்ந்த ஜேசன் சஞ்சயின் பெயர் தற்போது இணையத்தில் அடிக்கடி வைரலாகி வருகிறது. அப்பா விஜய்யை ஓரங்கட்டுகிறார் ஜேசன் சஞ்சய் என ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.