நடிகர் விஜய் குடும்பத்துக்கு இப்படி ஒரு நிலைமையா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா ட்விட்டரில் இல்லை என்று அவரின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

திரையுலகை சேர்ந்தவர்களின் பெயரில் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட போலி கணக்குகள் இருக்கின்றன. அது குறித்து தெரிய வரும் பிரபலங்கள் அது நான் இல்லை போலி என்று விளக்கம் அளிக்கிறார்கள்.

அப்படி போலி கணக்குகள் குறித்து பிரபலங்கள் எச்சரிப்பது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா பெயரில் ட்விட்டரில் கணக்குகள் இருக்கின்றன.

அந்த கணக்குகளில் ஜேசன், திவ்யா, விஜய்யின் புகைப்படங்கள், வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

இது குறித்து நடிகர் விஜய்யின் நெருக்கமான ஒருவர், அந்த கணக்குகள் போலி என்றும், ஜேசனும், திவ்யாவும் ட்விட்டரிலே இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த கணக்குகள் போலி என்பதை உணராமல் ரசிகர்கள் பலர் பின்தொடர்கிறார்கள் என்றும் அதனால் ரசிகர்கள் யாரும் ஏமாந்துவிடக் கூடாது என்பதால் இந்த விளக்கத்தை அளிக்கவேண்டும் என விஜய் சார் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். 


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்