புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் விஜய் சேதுபதி - நெகிழ்ச்சியில் கண் கலங்கிய குடும்பம்!
actor
vijasethupathi
By Anupriyamkumaresan
தன்னை பார்க்க விரும்பிய புற்றுநோயால் பாதித்த சிறுவனை நேரில் அழைத்து நடிகர் விஜய்சேதுபதி நம்பிக்கையூட்டிருக்கும் சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் ’தனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதிதான். அவரைப் பார்க்கவேண்டும்’ என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்திருந்தார்.
இதனை, தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் கேள்விப்பட்ட விஜய் சேதுபதி சிறுவனை குடும்பத்தினரோடு தனது வீட்டிற்கு அழைத்து சிறுவனை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து நம்பிக்கையூட்டியிருக்கிறார்.
இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.