விஜய் சொகுசுகார் விவகாரம்: மேல்முறையீடு மனு மீது நாளை விசாரணை!

சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜயின் மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

நடிகர் விஜய் 2012ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார்.காரை இறக்குமதி செய்தபோது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சுப்ரமணியம், நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என சாடியதுடன் வரியுடன் சேர்த்து ரூ. லட்சம் அபராதமாக கட்டவேண்டுமென உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா முன் நாளை விசாரணைக்கு வரவுள்ளது 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்